37 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
Friday, April 23rd, 2010 at 14:27 (SLT)
37புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் 37 புதிய அமைச்சர்களும் ,பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். மேலும் வாசிக்க >>>
75 இலங்கையருடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற படகு மலேசியாவில் சுற்றி வளைப்பு
Friday, April 23rd, 2010 at 14:26 (SLT)
இலங்கையிலிருந்து 75 பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்துப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தியும் அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. தாம் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பபடுவோம் என்ற காரணத்தினால் இவர்கள் தரையிறங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாசிக்க >>>
இலங்கையராக ஒருங்கிணைந்து எமது சக்தியை வெளிப்படுத்துவோம்: பிரதமர்
Friday, April 23rd, 2010 at 0:14 (SLT)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பை வழங்கி இலங்கையராக ஒன்றிணைந்து எமது சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துவோம் எனப் புதிய பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையில் குறிப்பிட்டார். அரசாங்கத்தைச் சரியாக வழிநடத்துவதற்குப் பாரிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ஜயரட்ன, சபாநாயகரைத் தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று அடுத்த ஆறு வருட காலத்திற்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். மேலும் வாசிக்க >>>
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
Friday, April 23rd, 2010 at 0:09 (SLT)
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற் கான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் வாசிக்க >>>
யுத்தம் முடிந்தும் நாட்டில் சமாதானம் நிலவுவதாகக் கருத முடியாது :சம்பந்தன்
Thursday, April 22nd, 2010 at 18:10 (SLT)
நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>
ஒரு கோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட இருவர் யாழில் மீட்பு : சந்தேக நபர்கள் கைது
Thursday, April 22nd, 2010 at 17:08 (SLT)
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இருவர் குருசோ வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க >>>
மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத்
Thursday, April 22nd, 2010 at 14:00 (SLT)
இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள், மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் ஜன நாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றுகாலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகளைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்துரை நிகழ்த்தினர். மேலும் வாசிக்க >>>
ஐரோப்பிய விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
Thursday, April 22nd, 2010 at 13:11 (SLT)
ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலையிலிருந்து பாரிய புகை வெளியேறுவது சற்றுக் குறைந்துள்ளதையடுத்து விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிமலையிலிருந்து திடீரென வெளியேறிய பாரிய புகைமண்டலம் மற்றும் சாம்பல் துகிள்கள், ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் 30 ஆயிரம் அடி உயரத்துக்குப் பரவி இருந்தன. மேலும் வாசிக்க >>>
ஐ.தே.கூட்டணியிலிருந்து விலகினார் மனோ கணேசன்
Thursday, April 22nd, 2010 at 12:12 (SLT)
ஜனநாயக மக்கள் முன்னணித்தலைவர் மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளதாக முன்னணித் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன. அதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>
புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு
Thursday, April 22nd, 2010 at 11:22 (SLT)
இலங்கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உப தலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார். இன்று காலை 8.00 மணிக்கு நாடாளுமன்ற முதலாவது அமர்வின் கூட்டத்தொடர் ஆரம்பமான போதே மேற்படி தெரிவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டம் நீரில் மூழ்கியதால் 50 குடும்பங்கள் இடம்பெயர்வு
Thursday, April 22nd, 2010 at 11:19 (SLT)
நேற்று நாள்ளிரவு பெய்த கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டம் நீரில் மூழ்கியுள்ளதுடன் சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் களுத்துறை மாவட்ட பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா பங்கேற்பு
Thursday, April 22nd, 2010 at 11:15 (SLT)
ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத் தொடரில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு
Wednesday, April 21st, 2010 at 16:21 (SLT)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க >>>
அமைச்சரவையை நியமித்த பின் ஜனாதிபதி பூட்டானுக்கு விஜயம்
Wednesday, April 21st, 2010 at 12:57 (SLT)
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச் சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். ஏழாவது நாடாளு மன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க >>>
தி.மு. ஜயரட்ன இன்று அலரி மாளிகையில் பிரதமராக பதவிப் பிரமாணம்
Wednesday, April 21st, 2010 at 12:43 (SLT)
நடந்து முடிந்த 7ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்ததையடுத்து இன்று தி.மு. ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Friday, April 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
HAI!ROMPA ALAKAY IRUKU
ReplyDelete